தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்மொழிக் கொள்கை மீது பொது வாக்கெடுப்பு: தினகரன் வலியுறுத்து

1 mins read
1df3bf34-2b49-477f-8ffe-6ff50261f341
டிடிவி தினகரன் - படம்: ஊடகம்

சென்னை: மும்மொழிக் கொள்கை மீது பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் யோசனை தெரிவித்துள்ளார்.

மூன்றாவது மொழியை அமல்படுத்துவது குறித்து பெற்றோர், மாணவர்களின் முடிவை அறிவது முக்கியம் என மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“காலஞ்சென்ற முதல்வர் அண்ணா இருந்திருந்தால் காலத்தின் தன்மை கருதி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார். திமுகவினர் தொடர்புடைய பள்ளிகள், அவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் அனைத்திலும் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

“ஆனால் ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் மட்டும் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படவில்லை. இது முற்றிலும் தவறானது,” என்றார் தினகரன்.

முதல்வர் ஸ்டாலினுக்குத் துணிச்சல் இருந்தால் மூன்றாவது மொழிக் கொள்கையை அனுமதிப்பது குறித்தும் இந்தி பயிற்றுவிப்பது குறித்தும் பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட தினகரன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தைப் பற்றி அவதூறாக ஏதும் பேசவில்லை என்றார்.

“புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைமையிலான தமிழக அரசு ஏற்கெனவே எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளித்துவிட்டு, பின்னர் அதிலிருந்து பின்வாங்கி விட்டது. இதைத்தான் மத்திய அமைச்சர் குறிப்பிடுகிறார்,” என்று தினகரன் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்