டிடிவி தினகரன் மருத்துவமனையில் சேர்ப்பு

1 mins read
a6cafac9-3ed1-4850-bba8-957b756c49b3
டி.டி.வி. தினகரன் - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை நள்ளிரவு அவர் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யவுள்ளதாக மருத்துவனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் வழக்கமான பரிசோதனைக்காகத்தான மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அமமுக தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

சென்னைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்