தவெக மாநாடு: பங்கேற்பாளர்களுக்கு மின்னிலக்கச் சான்றிதழ்

1 mins read
c82993b8-93bd-467a-9b51-a9364cdc2ca9
தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள். - படம்: தவெக / இன்ஸ்டகிராம்

விக்கிரவாண்டி: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் (தவெக) கட்சியின் முதல் மாநாடு ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 27) நடைபெறவுள்ளது.

அதோடு, கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக உரையாற்றவுள்ளார் விஜய். ரசிகர்கள், கட்சித் தொண்டர் மட்டுமின்றி தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் மாநாட்டைப் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு மின்னிலக்கச் சான்றிதழ் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் (QR) குறியீட்டின் மூலம் சான்றிதழைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்