விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பூமி பூசை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) நடைபெற உள்ளது.
இதில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனத் தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் 27ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தவெக கட்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் பூமி பூசை நடைபெறும் என்றும் இதையடுத்து, கட்சியின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவினர் மாநாட்டுப் பணிகளைத் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மாநாடு நடத்த இடம் வழங்கிய நில உரிமையாளர்கள் 25 பேரை புதன்கிழமை இரவு தாம் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அவர்களை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாகவும் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.