இரு பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சு வலி

1 mins read
144e9154-a471-4106-8d57-c15ea245d696
பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவர் ஜிகே மணி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக ஜி.கே. மணி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, சேலம் மேற்குத் தொகுதி பாமக எம்எல்ஏ அருளுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவைச் சந்திக்க புதன்கிழமை (ஜூன் 18) சென்னை தலைமைச் செயலகம் சென்ற அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவரின் உதவியாளர்கள் உடனடியாகத் தலைமைச் செயலக மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) அன்புமணி தலைமையில் பாமக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பாமக ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்