தமிழக அமைச்சர்கள் இருவரின் துறைகள் மாற்றம்

1 mins read
a475cd10-f804-44d4-8009-e1119afd08c8
தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் (இடது), எஸ்.ரகுபதி. - படங்கள்: ஊடகம்

சென்னை: தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (மே 8) அறிவிக்கப்பட்ட மாற்றத்தின்படி, அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதுபோல, அமைச்சர் ரகுபதி வகித்துவந்த சட்டத்துறை அமைச்சர் பதவி துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறையையும் அவரே பார்த்துக்கொள்வார்.

அமைச்சர்களின் துறைகளை மாற்றுவது தொடர்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்த பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பொன்முடி, செந்தில் பாலாஜி என்ற இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, அண்மையில்தான் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்