ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இரு இளையர்கள் உயிரிழப்பு

ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இரு இளையர்கள் உயிரிழப்பு

1 mins read
ecf4b984-8aef-44f4-b3b4-34f4dc3c7ed3
ஆற்றுக்கு அருகே உள்ள தெருவிளக்கில் இருந்து வயர் மூலம் சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து கல்லாற்றில் பாய்ச்சி, மீன்பிடிக்க இருவரும் திட்டமிட்டனர். - படம்: ஊடகம்

பெரம்பலூர்: ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இரு இளையர்கள் மின்சாம் பாய்ந்து உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். 29 வயதான இவர் கடந்த சனிக்கிழமையன்று 30 வயதான ரஞ்சித்குமார் என்ற நண்பருடன் கல்லாற்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.

ஆற்றுக்கு அருகே உள்ள தெருவிளக்கில் இருந்து வயர் மூலம் சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து கல்லாற்றில் பாய்ச்சி, மீன்பிடிக்க இருவரும் திட்டமிட்டனர்.

எனினும், கையில் மின் வயரை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் இருவரும் அந்த இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இதுபோன்று மேலும் சிலர் சட்ட விரோதமாக மீன் பிடிப்பதாக ஊர் மக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர்.

குறிப்புச் சொற்கள்