சென்னை: முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா வரும் அக்டோபரில் ஓய்வுபெற உள்ளதை அடுத்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் பதவிக்கு, முதல்வரின் செயலாளர் நிலை 1ல் இருந்த நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். திங்கட்கிழமை தலைமைச் செயலகம் வந்த நா.முருகானந்தம், தமிழகத்தின் 50வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், முதல்வரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது, 2001ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த உமாநாத், 2010ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர்.

