தடையற்ற மின் விநியோகம்: மின்வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தடையற்ற மின் விநியோகம்: மின்வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

1 mins read
651d7dd3-b778-4d5c-b727-8695fac2d8dd
தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்த பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ள தேர்தல் ஆணையம், சீரான மின் விநியோகம் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என நம்புகிறது. - படம்: விஷன் ஐஏஎஸ்

சென்னை: சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் ​வாக்குப்பதிவன்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளன்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக மின்வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படும்.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு நேரத்தில் அரசியல் கட்சியினர் செயற்கையாக மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாகக் கடந்த காலங்களில் பரவலாகப் புகார்கள் எழுந்தன. அதேபோல், இப்போதும் நடந்துவிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக உள்ளது.

தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்த பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ள தேர்தல் ஆணையம், சீரான மின் விநியோகம் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என நம்புகிறது.

இதையடுத்து, இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு, வாக்குகள் எண்ணும் நாளன்று தடையற்ற மின்சாரம் வழங்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, கோடைக்காலத்தில் மின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க, இரவு நேரங்​களில் மின்​தடை ஏற்​படு​வதைத் தடுக்க, அலு​வலர்​கள் நள்​ளிரவு வரை பணி​யாற்ற அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்