தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தித் திணிப்பில் மகாராஷ்டிராவின் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கிறதா: ஸ்டாலின்

1 mins read
4336803d-8149-4ec3-9e9a-2b56496861b5
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்திய மொழியைத் தவிர எந்த மொழியையும் கற்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று அந்த மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். அதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மகாராஷ்டிராவில் இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி என்று பேட்டி கொடுத்துள்ளார்.

இந்தி பேசாத மாநிலங்​களில் இந்​தி​யைத் திணிப்​ப​தற்கு எதி​ராக, மிகப் பரவலாக மக்​கள் தமது கண்​டனங்​களை தெரி​வித்​ததன் விளை​வாக உரு​வான நடுக்​கத்​தின் வெளிப்​பாடு​தான் அவரது இந்த நேர்காணல் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரு ஸ்டாலின் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்​நிலை​யில், பிரதமரும், மத்​திய கல்வி அமைச்​சரும் பின்​வரு​வனவற்றை தெளிவுபடுத்த வேண்​டும். தேசிய கல்விக் கொள்​கை​யின்​கீழ், மகா​ராஷ்டிரத்​தில் மராத்​தியை தவிர வேறு எந்த மூன்​றாவது மொழி​யும் கட்​டாயமல்ல எனும் தேவேந்​திர பட்​னா​விஸ் நிலைப்​பாட்டை மத்​திய அரசு அதி​காரபூர்​வ​மாக ஏற்​றுக் கொள்​கிற​தா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி, மூன்​றாவது மொழியை பயிற்​று​விப்​பது கட்​டாயமல்ல என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் மகாராஷ்டிராவில் அறிவித்ததைப் போல், தெளி​வான வழி​காட்​டு​தலை மத்​திய அரசு அனைத்து மாநிலங்​களுக்​கும் வழங்​கு​மா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மும்​மொழிக் கொள்​கையை ஏற்​றுக் கொள்​ள​வில்லை என்ற காரணத்​துக்​காக அநி​யாய​மாக தமிழகத்​துக்குத் தராமல் நிறுத்தி வைத்​திருக்​கும் ரூ.2,152 கோடியை மத்​திய அரசு விடுவிக்​கு​மா என்று முதல்​வர் ஸ்டாலின் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்