தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்து பரிசீலனை: அண்ணாமலை

1 mins read
95bb4017-d9e2-4be2-a607-d80f147a4159
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால் மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பல்வ்ஏறு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து தொலைபேசியிலும் அழைத்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்துப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும் பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி என்றும் தமது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்