சென்னையில் ரூ.3,510 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்

சென்னையில் ரூ.3,510 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்

படம்: இந்து தமிழ் திசை

14 Feb 2026 - 8:07 pm

1 mins read

சென்னை: அமெரிக்காவின் கேஎல்ஏ கார்ப்​பரேசன் நிறு​வனம் சென்​னை​யில் ஆராய்ச்சி மேம்​பாடு, புத்​தாக்க நிலையம் அமைக்கத் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் பிப்ரவரி 13ஆம் தேதி ஒப்​பந்​தம் செய்துகொண்டுள்ளது.

அமெரிக்காவைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட கேஎல்ஏ கார்ப்​பரேஷன், பகுதி மின்கடத்தி துறைக்​கான தொழில்​நுட்​பத் தீர்​வு​களை வழங்​கும் உலகளா​விய முன்​னணி நிறு​வனம் ஆகும்.

உலகம் முழு​வதும் உள்ள முன்​னணி சில்லு உற்​பத்​தி​யாளர்​களுக்கு ஆராய்ச்சி, மேம்​பாட்டுச் சேவை​களை வழங்​கி, புதிய தலை​முறை பகுதி மின்கடத்தி வளர்ச்​சி​யில் அந்​நிறு​வனம் முக்​கிய பங்கு வகிக்​கிறது.

அந்​த வகை​யில், கேஎல்ஏ கார்ப்​பரேசனின் துணை நிறு​வன​மான கேஎல்ஏ இந்​தியா நிறு​வனம் ரூ.3,510 கோடி முதலீட்டுடன் சென்​னை​யில், ஆராய்ச்சி மேம்​பாடு, புத்​தாக்க வளாகத்தை அமைப்பதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.

சென்​னை​யில், 12 ஏக்​கர் நிலப்​பரப்​பளவி​லான இந்த வளாகத்​தில், உயர் செயல்​திறன், கணினி தொழில்​நுட்​பம், செயல்​முறை கட்​டுப்​பாடு, பொறி​யியல் மென்​பொருள் போன்ற துறை​களில், மேம்​பட்ட ஆராய்ச்சி, புத்​தாக்கப் பணி​களை இந்​நிறு​வனம் மேற்​கொள்ள உள்​ளது.

அதன்​மூலம், அடுத்த 10 ஆண்​டு​களில், 4 ஆயிரம் உயர்தர வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

குறிப்புச் சொற்கள்
சென்னைஅமெரிக்காமுதலீடு