வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

1 mins read
7812cd04-6b15-4a48-9312-f496042465d4
வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு நாள் திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் மு.பா.அன்புச்சோழன் (மக்கள் தொடர்பு) மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தினர்.

குறிப்புச் சொற்கள்