தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவமனையில் வைகோ அனுமதி

1 mins read
e1411a2f-3302-47b1-b976-eb9da2a98fa1
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 80, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகன் துரை வைகோவிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார்.

இருப்பினும் அவ்வப்போது அரசியல் கருத்துகளை அவர் முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில், வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென சேர்க்கப்பட்டார். வலது தோள்பட்டையில் ஏற்கெனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, வைக்கப்பட்ட தகடை அகற்றுவதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரு வைகோ கீழே விழுந்ததால் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு முன்னதாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்