தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகன் பதவி விலகலை ஏற்க மறுத்த வைகோ

1 mins read
52bf8342-fb03-42ad-90b5-539843ba14bc
வைகோ, துரை வைகோ. - படம்: ஊடகம்

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ.

இந்நிலையில், சென்னையில் நேற்று (ஏப்ரல் 20) கூடிய மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் அவரது பதவி விலகல் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மதிமுக முதன்மை செயலாளராக துரை வைகோ தொடருவார் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதிமுகவில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது

குறிப்புச் சொற்கள்