தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சினிமாவின் அரசியல், அரசியலின் சினிமா’: மனம்விட்டுப் பேசிய ரஜினி, வைரமுத்து

1 mins read
ஒரு காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன்: வைரமுத்து
f385fc9b-9159-4839-a3ae-e976cfb3cc47
ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் வைரமுத்து சந்தித்தபோது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம். - படம்: எக்ஸ்/வைரமுத்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அவரின் இல்லத்தில் திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து சந்தித்துள்ளார்.

நீண்டநாள் கழித்து ரஜினியைச் சந்தித்ததில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வைரமுத்து, தங்கள் ‘ஆரோக்கியமான’ சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை (நவம்பர் 9) காலை பதிவிட்டார்.

“கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும். அவருள் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 80 நிமிடங்கள் உரையாடினோம். ஒரே ஒரு ‘கிரீன் டீ’யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை; இடைவெளியும் இல்லை.

“சினிமாவின் அரசியல், அரசியலின் சினிமா, வாழ்வியல், சமூகவியல், கூட்டணிக் கணக்குகள், தலைவர்கள், தனிநபர்கள் என எல்லாத் தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்தன.

“எதுகுறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது. தன் முடிவின் மீது உரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது. நான் அவருக்குச் சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை. தவத்திற்கு ஒருவர்; தர்க்கத்திற்கு இருவர். நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக்கொண்டோம்.

“ஒரு காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன். இருதரப்புக்கும் அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு,” என வைரமுத்து பதிவில் கூறினார்.

தங்கள் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அப்பதிவில் அவர் பகிர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்