ஓடிவந்த வானதி; கண்ணீர் மல்கிய குஷ்பு

ஓடிவந்த வானதி; கண்ணீர் மல்கிய குஷ்பு

1 mins read
c1ae9b66-3429-48ac-9e8a-5dc83574772a
வானதியின் கையைப் பிடித்து பிரசார மேடைக்கு அழைத்துச் சென்றார் குஷ்பு. - படமப: தினமலர்
Google News Preferred Icon

கோவை: தமிழக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் மேற்கொண்டபோது திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

இதையடுத்து, அங்கு அரங்கேறிய காட்சிகள் பாஜகவினரை நெகிழ வைத்தன.

முன்னதாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வானதிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோவை வடக்கு தொகுதியில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் குஷ்பு. அப்போது குஷ்புவின் இரு மகள்களும் உடன் இருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வீடு திரும்பிய வானதியிடம் குஷ்புவின் பிரசாரம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக கோவை வெங்கட்டாபுரத்தில் குஷ்பு பிரசாரம் மேற்கொண்ட இடத்துக்கு விரைந்து சென்றார் வானதி. அவரைக் கண்டதும் உணர்ச்சிமிகுதியில் கண்கலங்கிய குஷ்பு, வானதியை இறுக அணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.

பிறகு வானதிக்கு நெற்றியில் முத்தமிட்டு, அவரது கைபிடித்து பிரசார மேடைக்கு அழைத்துச் சென்றார் குஷ்பு.

இதைக் கண்டு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்