பாமக நுழைந்தால் விசிக வெளியேறும்: வன்னி அரசு

பாமக நுழைந்தால் விசிக வெளியேறும்: வன்னி அரசு

படம்: இந்து தமிழ் திசை

12 Oct 2026 - 8:00 pm

1 mins read

திண்டிவனம்: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமைக்கும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இணையுமானால், அந்த நொடியே விசிக அக்கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று தமிழக அமைச்சரும் விசிக நிர்வாகிகளில் ஒருவருமான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சாதியவாத, மதவாதச் சக்திகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கைகோக்காது என்றார்.

இந்த நிலைப்பாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் மிகவும் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விசிகவைப் பொறுத்தவரை, தேர்தல் வெற்றிகளோ அல்லது அதிகாரப் பதவிகளோ முதன்மையானவை அல்ல என்றார்.

“பதவிகளைவிட கட்சியின் கொள்கைகளும் தொண்டர்களின் உழைப்புமே முக்கியம். அதிமுக, திமுக போல சராசரி அரசியல் கட்சியாக இல்லாமல், ஒரு விடுதலை இயக்கமாகவே விசிக தொடர்ந்து களமாடும்,” என்று குறிப்பிட்டார் திரு வன்னி அரசு.

குறிப்புச் சொற்கள்
விசிகதவெகபாமககூட்டணி