தமிழகத்தில் காய்கறி விலை தொடர்ந்து அதிகரிப்பு

1 mins read
d611e2c0-da88-4a34-83f3-fcd4190603d6
பல கடைகளில் வெள்ளைக் கத்திரிக்காய் கிடைக்கவில்லை. - படம்: யூடியூப்

திருநெல்வேலி: தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்ததால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தைகளுக்குக் காய்கறிகள் வருவது கணிசமாகக் குறைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து காய்கறி விலை திடீரென அதிகரித்துள்ளதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. முகூர்த்த நாள் உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

வெள்ளைக் கத்தரிக்காய் கடந்த வாரம் கிலோ ரூ.120க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அதன் விலை மேலும் ரூ.20 அதிகரித்தது.

பல கடைகளில் வெள்ளைக் கத்தரிக்காய் கிடைக்கவில்லை.

அதேபோல், தக்காளி விலை ரூ. 60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அது ரூ.80க்கு விற்கப்பட்டது. வெண்டைக்காய் விலையும் கிலோவுக்கு ரூ.80ஆகக் கூடியது.

சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமான அளவில் அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்