தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேங்கைவயல் விவகாரம்: சி.பி.சி.ஐ.டிக்கு எதிராக மனு தாக்கல்

2 mins read
77060ff0-3301-47db-a590-f2588d530320
வேங்கை வயல் நீர்த்தேக்கத் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடிக்குப் பதிலாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவ்வூர் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். - கோப்புப்படம்: ஊடகம்

புதுக்கோட்டை: வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

அந்தக் குற்றப்பத்திரிகையில் வேங்கைவயலில் வசிக்கும் மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வேங்கைவயல் மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக திங்கட்கிழமையும் தொடர்ந்தது. அதையடுத்து வேங்கைவயலில் கலவரம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு ஊரின் நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், புகார்தாரரை இதுவரை விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனப் பட்டியலின மக்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பாரிவேந்தன் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் குற்றப்பத்திரிக்கையின் நகல் வேண்டுமென்ற கோரிக்கைகள் இந்த மனுவில் இடம் பெற்றுள்ளன. 

சி.பி.சி.ஐ.டியின் குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்