ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூவரின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூவரின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

1 mins read
089edac8-4008-42d3-b5a8-8dad2a293620
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மூவரின் பிணை மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்​பி​டா​மல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ரான ஆம்ஸ்ட்ராங் ​கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, மணி​கண்​டன், சந்​தோஷ் ஆகியோர் தங்​களுக்கு பிணை கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது முறை​யாக மனு தாக்​கல் செய்திருந்​தனர்.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை நீதிபதி சி.குமரப்​பன் முன்னிலையில் நடந்​தது. அப்போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் முன்னிலையான வழக்​கறிஞர் எம்​.ஸ்ரீதர், “மனு​தா​ரர்​கள் 700 நாள்​களுக்குமேல் சிறை​யில் உள்​ளனர்.

“குற்​றம் சாட்​டப்​பட்ட மற்​றவர்களுக்கு பிணை வழங்கப்​பட்​டுள்​ளது. வழக்கு தொடர்​பான குற்​றப்​பத்​திரி​கையை ரத்து செய்​து, சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உயர் நீதி​மன்​றம் உத்தரவு பிறப்பித்​துள்​ளது.

“ஆட்சி மாற்​றத்​துக்​குப் பிறகும் சிபிஐ விசா​ரணை தொடர்​பாக அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்​க​வில்​லை” என்​றார்.

காவல்​துறை தரப்​பில் முன்னிலையான அரசு வழக்​கறிஞர் கணேஷ்கு​மார், “சாட்​சிகள் மிரட்டப்​பட வாய்ப்புள்ளதால் இவர்களுக்கு பிணை வழங்​கக்கூ​டாது,” என எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, மூவரின் பிணை மனுக்​கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் ஒத்திவைத்தார்.

குறிப்புச் சொற்கள்