கோவை: இந்தியத் துணை அதிபர் சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) கோவை சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருந்தார்.
இந்நிலையில், அவரை வரவேற்க பாரதிய ஜனதா கட்சியினர் (பாஜக) உள்ளிட்ட பலரும் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சூழலில், திரு ராதாகிருஷ்ணனின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தந்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
எனவே, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.