பாடகர் மனோவின் மகன்களை சிலர் தாக்கும் காணொளி; காவல்துறை விளக்கம்

1 mins read
bcefa165-a406-407e-a03e-0006d7f33529
பாடகர் மனோ, அவரது மகன்கள். - படம்: ஊடகம்

சென்னை: அடிதடி வழக்கில் சிக்கியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் இரு மகன்களை, சிலர் கும்பலாகத் தாக்குவது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அக்காணொளியின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

அண்மையில் மனோவின் இரு மகன்களான சகீர் (38 வயது), ரஃபிக் (35 வயது) ஆகிய இருவரும் மதுபோதையில் இரண்டு இளையர்களைத் தாக்கியதாக வழக்குப் பதிவானது.

மனோ வீட்டுப் பணியாளர்கள் இருவர் மீதும்கூட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.

இதற்கிடையே, மனோவின் மகன்களை பத்துக்கும் மேற்பட்டோர் விறகுக்கட்டைகள், கற்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தாக்குவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து, காவல்துறையின் விளக்கம் வெளிவந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்