சென்னை: அண்மையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் முதல்வர் அலுவலகம் தொடங்கிய அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல்வர் விஜய்யை லட்சக்கணக்கானோர் சமூக ஊடகப் பக்கங்களில் பின்தொடர்கின்றனர்.
இன்ஸ்டகிராமில் @cmotamilnadu என்ற பக்கம் தொடங்கப்பட்ட பின்னர், கடந்த 9ஆம் தேதி வரை நாற்பது லட்சம் பேர் அதைப் பின்தொடர்ந்தனர்.
எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் இந்த எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து, 1.70 கோடியைத் தொட்டது.
இவ்வாறு ஒரே நாளில் இன்ஸ்டகிராம் தளத்தில் லட்சக்கணக்கானோர் ஒரு பிரபலத்தைப் பின்தொடர்வது முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இதேபோல் எக்ஸ், ஃபேஸ்புக் தளங்களிலும் முதல்வர் அலுவலகப் பக்கங்களைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
“மிகக் குறுகிய காலத்தில் 1.70 கோடி பேர் முதல்வரின் இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பின்தொடரத் தொடங்கியுள்ளனர். இது ஒரு சாதனையாகும். மேலும், மின்னிலக்கத் தளங்கள் மீதான இளையர்களின் ஆர்வத்தையும் புதிய அரசின் மீதான எதிர்பார்ப்பையும் பிரதிபலிப்பதாக உள்ளது,” என அரசியல் களப் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

