மாறுவேடத்தில் தொகுதி உலா செல்லும் விஜய்

மாறுவேடத்தில் தொகுதி உலா செல்லும் விஜய்

1 mins read
c0f4d950-86a3-4dd2-91db-9d1f17ef81dd
முதல்வர் விஜய். - படம்: வெப்துனியா தமிழ்

சென்னை: முதல்வர் விஜய் தனது பெரம்பூர் தொகுதியில் அவ்வப்போது மாறுவேடத்தில் சென்று அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து விவரங்களைச் சேகரித்து வருவதாக தவெக நிர்வாகி ஆனந்த்ஜீத் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து தவெக நிர்வாகி ஆனந்த்ஜீத் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் விஜய் அவ்வப்போது பெரம்பூர் தொகுதிக்கு மாறுவேடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் சத்தமின்றி எங்கு, என்னென்ன பிரச்சினைகள் நிலவுகின்றன என்பதைத் துல்லியமாகக் குறித்து வைத்துள்ளதாகவும் ஆனந்த்ஜீத் கூறியுள்ளார்.

“முதல்வர் பெரம்பூர் தொகுதிக்குப் போகவே இல்லை என நீங்களாக நினைத்துக்கொண்டால் நாங்கள் என்ன செய்வது? முதல்வரின் நடவடிக்கை விரைவில் தொடங்கும். அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும்போது அனைவருக்கும் தெரியவரும்,” என்று ஆனந்த்ஜீத் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்