தேர்தல் வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார்: தவெக

1 mins read
afff4003-e088-40d9-b34f-e01892fe410b
தவெக தலைவர் விஜய். - கோப்புப் படம்: இந்து

சென்னை: தமிழக சட்டமன்றத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சித் தலைவா் விஜய்தான் அறிவிப்பாா் என அக்கட்சித் தலைமைத்துவம் தெரிவித்துள்ளதாக தினமணி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தவெக முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது.

இதனையடுத்து தோ்தல் பணிகளை தவெக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், தொகுதி வாரியாக ‘எனது பூத் - தவெக பூத்’ எனும் தலைப்பில் வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளா்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தவெக வேட்பாளா்களின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து கட்சித் தலைமை விளக்கம் அளித்தது.

தவெக தலைமை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சியின் தலைவா் விஜய் மட்டுமே அறிவிப்பாா்.

“எனவே, தவெக வேட்பாளா் அறிவிப்பு குறித்து பரவி வரும் தகவல்கள் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே,” என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்