சென்னை: தேமுதிக நிறுவனரான காலஞ்சென்ற விஜயகாந்தின் முதலாண்டு நினைவுநாள் குருபூசை, டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சி சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிகவின் துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், குருபூசையில் பங்கேற்க வருமாறு முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுதீஷ் மேலும் தெரிவித்தார்.

