தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் சுவரொட்டியால் பரபரப்பு

1 mins read
ba82ac9c-4ee6-4f03-8801-21bec1e473ef
தமிழக வெற்றிக் கழகத்தின் சர்ச்சைக்குரிய சுவரொட்டி. - படம்: தமிழக ஊடகம்

கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ‘2026ல் தமிழகத்தை ஆளப்போறோம்’ என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை புறநகர் கிழக்கு வட்டத் தலைவர் பாபு தலைமையில், பொதுக் குழுவில் கூட போறோம், தளபதி தலைமையில் 2026ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்று கோவை முழுவதும் பொதுக் குழுக் கூட்டத்துக்குச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

விஜய் தலைமையில் ஆளப்போறோம் என தவெக-வால் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்