தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் - உயர் நீதிமன்றம் கேள்வி

1 mins read
cd88df84-ba1c-4975-b18d-23012abc1b81
சென்னை உயர் நீதிமன்றம். - படம்: கோப்புப் படம்

சென்னை: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியிடங்கள் குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அதற்குத் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள 13 காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள 16 இடங்களுக்குத் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்