சென்னை: தமிழகத்தின் அன்றாட மின் தேவை 14 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் அன்றாட சராசரி மின் தேவை 16,000 மெகாவாட் ஆகும். குளிர் காலத்தில் இத்தேவை 10,000 மெகா வாட் ஆகக் குறையும் எனில், கோடைக் காலத்தில் 20,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிப்பதுண்டு.
இந்த ஆண்டு மே 2ஆம் தேதியன்று மின் தேவை 20,830 மெகா வாட் ஆக அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அன்றாட மின் தேவை 14 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்துள்ளதாக மின் வாரியம் கூறியுள்ளது.

