தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சொர்க்கத்தில் உள்ள ஸ்ரீதேவியையும் காவல்துறையினர் கைது செய்வார்களா?’

1 mins read
7362ec23-4a01-48bd-b3bd-94ee1d7b8fa4
ஸ்ரீதேவி, ராம்கோபால் வர்மா. - படம்: ஊடகம்

‘புஷ்பா-2’ படத்தைப் பார்க்க வந்த ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்று உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

அல்லு அர்ஜுனைக் கைது செய்தது தவறான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு ‘க்‌ஷண க்‌ஷணம்’ படத்தை இயக்கினேன். அதில் காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

“படப்பிடிப்பு நடந்த இடத்தில் திடீரென ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அனைவரும் திகைத்துப்போனோம்.

“அப்போது பாதுகாப்பு வழங்க வந்திருந்த காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு காரணமாக மூன்று ரசிகர்கள் உயிரிழக்க நேரிட்டது.

“இதற்காக சொர்க்கத்தில் உள்ள ஸ்ரீதேவியைக் காவல்துறையினர் கைது செய்வார்களா? பிரபலமாக உள்ள திரையுலகத்தினருக்கு எதிராகச் செய்யப்படும் குற்றமாகவே இதுபோன்ற கைது நடவடிக்கைகளைக் கருத வேண்டியுள்ளது,” என்கிறார் ராம்கோபால் வர்மா.

எனவே, திரையுலகத்தினர் தங்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை ஒன்று திரண்டு கடுமையாக எதிர்க்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து, அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவுக்கு நன்றியும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இத்தனைக்கும் அல்லு அர்ஜுன் படங்களைக் கடந்த காலங்களில் மிகக் கடுமையாக விமர்சித்தவர்களில் இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக மேலும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்