நாகர்கோவில்: பெருவிளைப் பகுதி அருகேயுள்ள கோட்டவினைப் பகுதியைச் சேர்ந்தவர் நாட்டு வைத்தியவர் ஜான் ஸ்டீபன். இவர் சோதிடமும் பார்த்து வந்தார்.
இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி ஜான் ஸ்டீபன் வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இதுபற்றிய தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற் கூறாய்வில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதில் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கட்டி மாங்கோடு பகுதியைச் சேர்ந்த கலையரசி (43), நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் (25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது சில பரிகாரங்களை செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று சோதிடர் ஜான் ஸ்டீபன் கூறி பரிகாரத்துக்காக 9.5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
பலமுறை சோதிடம் பார்த்த பிறகும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. இது கலையரசிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜான் ஸ்டீபனிடம் இதுபற்றி கேட்டுள்ளார். சோதிடர் கூறியது எதுவும் பலிக்காததால் கொடுத்த பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் ஜான் ஸ்டீபன் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தச் சண்டையைத் தொடர்ந்து, அந்தச் சோதிடரை, கூலிப் படையை ஏவிவிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கலையரசி மற்றும் நம்பி ராஜனிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.