சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கும் அவா் பயணம் செய்யவுள்ள நிலையில், அவரது பாதுகாப்பு கருதி ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, 8 முதல் 11 மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை வீரா்கள் சுழற்சி முறையில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்ட முக்கிய நபா்களுக்கு அச்சுறுத்தல் தொடா்பாக உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

