செல்ஃபியால் வந்த வினை: காட்டு யானை தாக்கி தமிழக இளையர் உயிரிழப்பு

செல்ஃபியால் வந்த வினை: காட்டு யானை தாக்கி தமிழக இளையர் உயிரிழப்பு

1 mins read
07ceda5b-db30-43d1-976f-c133aaf118eb
இறந்தவர் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு எ.ராம்குமார், 27. படம்: தமிழக ஊடகம் -

யானையுடன் செல்ஃபி படம் எடுப்பதற்காக அதை நெருங்கிய ஆடவர் ஒருவரை அந்த யானை முட்டி, மிதித்ததில் அவர் உயிரிழந்தார். இறந்தவர் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு ஈ.ராம்குமார், 27.

அவர் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது பாலக்கோடு வனப்பகுதியிலிருந்து இரு யானைகள் வருவதை அவர் கண்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த யானைகளை நோக்கி நடந்துசென்ற அவர், அவற்றுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள முற்பட்டார். ஆனால், தான் மிரட்டப்படுவதை உணர்ந்த அந்த யானைகளில் ஒன்று, திரு ராம்குமாரைத் தாக்கியது.

வனவிலங்குடன் செல்ஃபி படம் எடுக்க முற்பட்டதால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.