தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது

1 mins read
eec59f7c-6e06-4abb-819c-13eda2422437
மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாகத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். - படம்: தமிழக ஊடகம்

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்தக் கடையில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்தப் பெண்ணை சித்திக் ராஜா என்ற வாலிபர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் தன்னைக் காதலிக்குமாறு வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் காதலுக்கு இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்த வாலிபர், ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டார். இந்தத் தாக்குதலில் இளம்பெண்ணிற்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் உடனே அங்கிருந்து தப்பி ஓடினார். காயமடைந்த பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இளம்பெண்ணைத் தாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பரைக் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இதனிடையே காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சித்திக் ராஜாவுக்கு கைமுறிவு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்