கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள சொத்திக்குப்பம் அருகே கூகல் வரைபடத்தின் உதவியுடன் காரில் பயணம் செய்த இளையர்கள் காரை கடலுக்குள் இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஆடவர் மூவரும் பெண்கள் இருவரும் கடலோரமாக காரில் பயணம் செய்தனர். இந்நிலையில், வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 11) அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து பரங்கிப்பேட்டை வரை கூகல் வரைபடத்தின் உதவியோடு காரில் சென்றனர்.
அவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சொத்திக்குப்பம் பகுதிக்கு வந்த அவர்கள் காரை கடலுக்கு அருகே ஓட்ட முயற்சித்தபோது காரை கடலுக்குள் இறக்கியதால் அது பாதியிலே நின்றது.
இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக இறங்கி ஐவரையும் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் காவல்துறை உதவியுடன் காரை கனரக வாகனத்தின் மூலம் கரைக்கு கொண்டுவந்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.