எஸ்எம்ஆர்டி விபத்தில் இரு ஊழியர்கள் மரணம்

எஸ்எம்ஆர்டி விபத்தில் இரு ஊழியர்கள் மரணம்

23 Mar 2016 - 7:46 am

1 mins read

ரயில் தண்டவாளத்தில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் இரண்டு எஸ்எம்ஆர்டி ஊழியர் கள் உயிரிழந்தனர். இவர்கள், ரயில் ஓடிக்கொண் டிருந்த சமயத்தில் தண்டவாளம் ஓரமாக இருந்த பாதையில் நடந்துசென்ற 15 பேர் அடங்கிய குழுவில் இடம்பெற்ற பராமரிப்பு ஊழியர்கள் ஆவர். இரு ஊழியர்கள் மீதும் எப்படி ரயில் மோதியது என்பது குறித்து விசாரணையில் முக் கிய கவனம் செலுத்தப்படும் என்று நேற்று வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. தெளிவாகப் பார்க்கக்கூடிய வெளிச்சத்தில் மேற்பார்வை யாளர் ஒருவர் பொறுப்பில் இருந்துள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை செய்தியாளர் களிடம் பேசிய எஸ்எம்ஆர்டி தலைமை நிர்வாகி டெஸ்மண்ட் குவெக், "பக்கவாட்டுப் பாதை யில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர். இறந்த ஊழியர்கள் இருவரும் வரிசையில் 2வது, 3வது இடத் தில் இருந்தனர். இவர்கள் மீது எப்படி ரயில் மோதியது என்பதை தீவிரமாக விசாரித்து வரு கிறோம்," என்றார். இரு ஊழியர்கள் மீது ரயில் மோதியபோது அந்த ரயில் தானியக்க முறையில் இயங்கிக் கொண்டிருந்தது என்றும் பாசிர் ரிஸ் எம்ஆர்டியை நோக்கி 60 கி. மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது என்றும் அவர் சொன் னார்.