சிங்கப்பூரில் குடியிருப்புப் பேட்டைகளில் சமூகப் பிணைப்பைப் பலப்படுத்தும் முயற்சியில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதிய விளையாட்டுத் திடல்களை வடி வமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. அந்தத் திடல்கள், அக்கம்பக்கத்தின் பாரம்பரியத்தை, வரலாற்றைக் கருப்பொரு ளாகக் கொண்டிருக்கும். வீவக, தன்னுடைய விளையாட்டுத் திடல்கள் வடிவமைப்பைப் படிப்படியாக மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 60களில் அமைக்கப்பட்ட விளையாட்டுத் திடல்கள் பல பரிணாமங் களைப் பெற்று அண்மைய ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் உள்ள பல தலைமுறை களுக்குப் பொருத்தமான வகையில் மாற்றம் கண்டுவந்துள்ளன.
இந்த வடிவமைப்பில் அடுத்தகட்ட மாக அமையவிருக்கின்ற விளையாட்டுத் திடல்கள் கருப்பொருளுடன் கூடியவை யாக இருக்கும். அதாவது, ஒரு நகரத்தின் அடையாளத் தைப் பலப்படுத்தும் வகையில் இத்தகைய திடல்கள் அமைந்திருக்கும். பிள்ளைகளுக்கு இப்போது கிடைப்பதை விட இன்னும் சிறந்த விளையாட்டு அனு பவங்களை வழங்குவதோடு, குடும்பங் களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் இடையில் அணுக்கமான பிணைப்பு ஏற்பட புதிய வடிவமைப்புகள் ஊக்கமூட்டும்.
கியட் ஹோங்கில் கருப்பொருளுடன் கூடிய விளையாட்டுத் திடலில் விளையாடும் சிறுமி. ஒரு நகரின் வரலாற்றை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இத்தகைய விளையாட்டுத் திடல்களை வடிவமைக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

