தொகுதியில்லா உறுப்பினர்மீது அடுத்தகட்ட நடவடிக்கை பரிசீலனை: சண்முகம்

தொகுதியில்லா உறுப்பினர்மீது அடுத்தகட்ட நடவடிக்கை பரிசீலனை: சண்முகம்

1 of 2

23 Mar 2023 - 5:30 am

2 mins read

தொகு­தி­யில்லா உறுப்­பி­னர் லியோங் மன் வாய் நாடா­ளு­மன்ற நடை­மு­றை­க­ளை­யும் விதி­க­ளை­யும் மீறி­யது தொடர்­பாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­வ­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

இரு­வ­ருக்­கும் இடை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நிகழ்ந்த கடு­மை­யான வாக்­கு­வா­தம் அமைச்­சர்­நிலை அறிக்கை வெளி­யி­டும் அள­வுக்­குச் சென்­றது.

திரு லியோங் நாடா­ளு­மன்ற விதி

­க­ளுக்கு முர­ணாக நடந்­து­கொண்­டதை ஏற்க இய­லாது என்று திரு சண்­மு­கம் அந்த அறிக்­கை­யில் குறிப்­பிட்­டார். திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற நாடா­ளு­மன்ற விவா­தத்­திற்­குப் பின்­னர் திரு லியோங் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் முறை­யற்ற, உண்­மை­யற்ற தக­வல்­கள் இடம்­பெற்­றி­ருந்­த­தாக அவர் கூறி­னார்.

இதற்கு முன்­னர் நடை­பெற்ற விவா­தத்­தின்­போது திரு லியோங் தாக்­கல் செய்த கேள்­விக்கு திரு சண்­மு­கம் பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

விசா­ரணை நடை­பெற்­றுக்­கொண்டு இருக்­கும் நிலை­யில் திரு லீ சியன் யாங் மற்­றும் அவ­ரது மனைவி திரு­வாட்டி லீ சுவெட் ஃபெர்ன் பெயரை உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டது ஏன் என்று திரு லியோங் கேட்­டி­ருந்­தார்.

லஞ்ச ஊழல் தொடர்­பாக கெப்­பர் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவ­னத்­தின் ஆறு நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­திய காவல்­துறை, அந்த ஆறு பேரின் பெயரை வெளி­யி­டாத நிலை­யில் இந்த இரு­வ­ரின் பெயர் மட்­டும் வெளி­யி­டப்­பட்­டது ஏன் என்­ப­தும் திரு லியோங்­கின் கேள்­வி­யாக இருந்தது.

திரு சண்­மு­கம் பதி­ல­ளிக்­கை­யில், இது தொடர்­பாக தாம் ஏற்­கெ­னவே விளக்­கம் அளித்த நிலை­யில் மேற்­கொண்டு கேள்­வி­களை நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பும் வாய்ப்பு திரு லியோங்­கிற்­குத் தரப்­பட்டு இருந்­த­தா­க­வும் ஆனால், அதற்­குப் பதில் அவர் தமது ஃபேஸ்புக்­கில் கடு­மை­யான குறை­கூ­ற­லைப் பதி­வு­செய்­த­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

முன்­னாள் பணிப்­பெண் பார்த்தி லியா­னி­யின் வழக்கை எழுப்பி, நீரில் சேற்­றைக் கலக்க சட்ட அமைச்­சர் முயல்­

வ­தா­க­வும் அவர் தமது பதி­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.

திரு லியோங்­கின் ஃபேஸ்புக் பதிவு தம் மீதும் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் மீதும் பழி­தூற்­றும் வகை­யில் அமைந்­துள்­ள­தாக திரு சண்­மு­கம் நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­னார்.

அத­னால், திரு லியோங் தமது ஃபேஸ்புக் பதிவை நீக்­கி­விட்டு, அதில் உள்ள தக­வல்­களை மீட்­டுக்­கொண்டு மன்­னிப்­புக் கேட்க வேண்­டும் என்­றும் அவ்­வாறு செய்­யத் தவ­றி­னால் நட­

வ­டிக்கை எடுப்­பது பற்றி பரி­சீ­லிக்­கப்­படும் என்­றும் திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.

ஆனால், அமைச்­ச­ரின் மீது தாம் பழி­தூற்­றும் வகை­யில் எதனையும் பதி­வி­ட­வில்லை என்­றும் திரு லீ சியன் யாங் தொடர்­பான வழக்­கிற்­கும் கெப்­பல் நிறு­வ­னம் தொடர்­பான வழக்­கிற்­கும் இடை­யி­லுள்ள வேறு­பா­டு­களை மக்­கள் கவ­னிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே தமது கருத்துகளைப் பதிவு செய்­த­தா­க­வும் திரு லியோங் நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­னார்.

அத­னைத் தொடர்ந்து பேசிய அமைச்­சர் சண்­மு­கம், "திரு லியோங்­கின் வாதம் தமது பதி­வு­களை மீட்­டுக்­கொள்ள­வில்லை என்­ப­தைக் காட்­டு­

வ­தால் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை குறித்து பரி­சீ­லிப்­போம். நட­வ­டிக்கை இறுதி செய்­யப்­ப­டு­முன் உறுப்­பி­ன­ரின் (திரு லியோங்) மன­நி­லை­யில் மாற்­றம் ஏற்­பட்­டால் அது குறித்து எங்­க­ளி­டம் தெரி­விக்­க­லாம்," என்று கூறி­னார்.