சிங்கப்பூருடனான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண்பதில் ஜோகூர் முதல்வர் ஆர்வம்

2 mins read

சிங்­கப்­பூ­ரு­டனான இணைப்­புப் பாலங்­களில் ஏற்­படும் போக்­கு­

வ­ரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஜோகூர் தொடர்ந்து கடப்­பாடு கொண்­டுள்­ள­தாக அந்த மாநி­லத்­தின் முதல்­வர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறியுள்ளார்.

மேலும், போக்­கு­வ­ரத்து நெரிசலை முடி­வுக்­குக் கொண்­டு­ வ­ரு­வ­தன் தொடர்­பில் மலேசியக் கூட்­ட­ர­சாங்­கத்­து­டன் ஜோகூர் மாநில அரசு இணைந்து பணி­யாற்­று­வ­தும் தொட­ரும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான தானி­யக்க வாயில் பயன்­பாட்டை விரிவு­ப­டுத்­து­வது, மோட்­டார்­சைக்­கிள் தடங்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் கூட்­டு­வது, எல்­லைக் கட்­டுப்­பாடு தொடர்­பான அமைப்­பு­க­ளின் முகப்­பு­களை ஒன்­றி­ணைப்­பது ஆகி­யன உள்­ளிட்ட அம்­சங்­கள் கவ­னத்­தில் எடுத்துக்கொள்­ளப்­பட்டு உள்­ள­தா­க­வும் திரு காஸி கூறி­னார்.

மாநில சட்­ட­மன்­றத்­தில் நேற்று உரை­யாற்­றிய அவர், "இந்­தப் போக்­கு­வ­ரத்து நெரிசல் பன்­னெ­டுங்­கா­ல­மாக இருந்­து­வ­ரு­வதை நாம் அறி­வோம். இதற்­குத் தீர்­வு­காண மலேசியக் கூட்­ட­ர­சு­டன் இணைந்து பணி­யாற்­றும் உணர்­வைக் கைவிட்­டுவிடக் கூடாது," என்­றார்.

ஜோகூர் நீரி­ணை­யில் நான்கு பிரி­வு­க­ளாக உள்ள அமைப்­பு­

க­ளின் முகப்­பு­களை ஒன்­றாக்கி பய­ணி­க­ளுக்கு அனு­மதி வழங்­கும் ஒற்றை முனை ஏற்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

"கடப்­பி­த­ழைக் காட்டி அனு­மதி பெற­வும் கட்­ட­ணத்­தைச் செலுத்­த­வும் பய­ணி­களை இரு­முறை நிறுத்த வேண்­டிய அவ­சி­யம் தற்­போது உள்­ளது. முகப்­பு­கள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பின்­னர் ஓரி­டத்­தில் அவர்­கள் அனு­ம­திக்­கான நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றி­னால் போது­மா­ன­தாக இருக்­கும்," என்­றார் திரு காஸி.

விடுமுறை முடிந்தும் நெரிசல்

இதற்­கி­டையே, மார்ச் பள்ளி விடு­முறை முடி­வுக்கு வந்­தும் உட்­லண்ட்ஸ் கடற்­பா­லத்­தில் சிங்­கப்­பூ­ருக்கு வரும் வாக­னங்­க­ளால் நேற்று முன்­தி­னம் கடுமையான போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

அத­ன் காரணமாக குடி

­நு­ழைவு நடை­மு­றை­களை நிறை­வேற்­ற நீண்டநேரம் காத்திருக்க நேர்ந்தது குறித்து வாக­ன­மோட்­டி­கள் ஃபேஸ்புக்­கில் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­னர்.