பொது இடங்களில் இரவில் உறங்குவோரின் எண்ணிக்கை 40% குறைந்தது

பொது இடங்களில் இரவில் உறங்குவோரின் எண்ணிக்கை 40% குறைந்தது

24 Apr 2023 - 4:43 pm

1 mins read

சிங்கப்பூரில் இரவு வேளையில் பொது இடங்களில் உறங்குவோரின் எண்ணிக்கை 40 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது.

2019 ஆண்டில் 921 பேர் இரவில் பொது இடங்களில் உறங்கினர்.

2022ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 530 பேர் என்றிருந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமையன்று (24 ஏப்ரல்) அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றது.

குடும்பத்தார் அல்லது ஒன்றாக வசிப்போருடன் எழும் கருத்து வேறுபாடுகள், வீடு வாங்குவதிலோ வாடகை வீடு எடுப்பதிலோ உள்ள சிரமம், நிதி நெருக்கடி போன்றவையே சிலர் பொது இடங்களில் உறங்குவதற்கான முக்கிய காரணங்கள்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய கருத்தாய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

ஓர் இரவில் வெளியே உறங்குபவர்களைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது.