மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்: லாரன்ஸ் வோங்

பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.

மேலும், தற்போதைய அமைச்சரவையில் அதிக மாற்றம் இருக்காது என்றும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகே அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறலாம் என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் தலைமைத்துவ மாற்றங்கள் தொடர்ச்சியை வலியுறுத்துவதாகவும் படிப்படியான மாற்றத்தை நிலைநிறுத்துவதாகவும் விளங்கியுள்ளன என்றும் இதுபோன்ற மாற்றங்களில் முந்தைய அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பதவியிலிருந்து விலகுவது நமது முறையன்று என்றும் அவர் தெரிவித்தார்.

வெவ்வேறு வழிகளில் அவர்கள் தொடர்ந்து சேவையாற்றும் அதே நேரம், இளையோர் மேலும் பொறுப்புகளை ஏற்க வழிவகுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

மே மாதம் 15ஆம் தேதி பிரதமர் பொறுப்பைத் தாம் ஏற்பதற்கு சில நாள்களுக்கு முன்னர் தமது அமைச்சரவையின் பட்டியல் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தலைமைத்துவ மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நிதி அமைச்சருமான திரு வோங் ஏப்ரல் 16ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மாபெரும் சான்றோர்களின் வழிமுறைகளைப் பின்தொடர்வதாகவும் அவர்களில் திரு லீ சியன் லூங் தனித்து மிளிர்வதாகவும் திரு வோங் புகழாரம் சூட்டினார்.

சிங்கப்பூருக்காக கடந்த 20 ஆண்டுகளாக பெரும்பங்காற்றி உள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் பொருளியல் வியப்பூட்டும் அளவில் வளர்ச்சியடைந்து உள்ளதாகவும், சிங்கப்பூரர்களின் வருமானமும் வாழ்க்கைத் தரமும் நிலையான வளர்ச்சியை அடைந்ததாகவும் அவர் சுட்டினார்.

பல நெருக்கடிகளைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு ஒவ்வொரு முறையும் வலுவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் நிலை மிகுந்த வலிமையுடன் இருப்பதாகவும் சொன்னார்.

உலகெங்கிலும் சிங்கப்பூரின் பெயர் வியக்கத்தக்க வகையிலும் மதிப்புடனும் பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சிங்கப்பூரர்கள் அனைவரின் சார்பாக, திரு லீ சியன் லூங் நாட்டுக்காக ஆற்றிய தன்னலமற்ற சேவைக்காகவும் நிலையான பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!