நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க், பென்சில்வேனியா நகரங்களைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கனமழை புரட்டி எடுத்தது.
வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டன. வாகனங்களில் சிக்கித் தவித்தோரை மீட்புப் பணியினர் மீட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நியூயார்க்கில் உள்ள வெஸ்ட் பாயிண்ட்டில் திடீர் வெள்ளத்துக்கான அபாய ஒலி ஒலிக்கப்பட்டது. அவ்விடத்தில் அமெரிக்க ராணுவத்தின் பயிற்சிக் கழகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


