ஆசியாவின் ஆகப் பெரும் செல்வந்தர் இந்தியாவின் கௌதம் அதானி

1 mins read

ஆசியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியாவின் கௌதம் அதானி.

59 வயதான அதானியின் மொத்த சொத்தின் மதிப்பு 88.5 பில்லியன் டாலர் என புளூம்பெர்க் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இவர் அதானி குரூப் எனும் அனைத்துலகக் குழுமத்தின் தோற்றுவித்தவரும், தலைவரும் ஆவார்.

பட்டியிலின் முன்னணியில் இருந்த முகே‌ஷ் அம்பானியை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிட்டு, முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதானி.

-

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலர்.

மூன்றாவது இடத்தில் 75.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சீனாவைச் சேர்ந்த ‌ஸோங் ஷான்‌ஷான்.

-

அவரையடுத்து டிக்டாக் எனும் பிரபல சமூக ஊடகத் தளத்தை நிறுவிய ஸாங் யிமிங். 39 வயதான இவரின் சொத்து மதிப்பு 44.5 பில்லியன் டாலர்.

-