இலங்கைத் தலைநகர் கொழும்பில் மீண்டும் போராட்டம்(காணொளி)

இலங்கைத் தலைநகர் கொழும்பில் மீண்டும் போராட்டம்(காணொளி)

1 mins read

இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை எதிர்த்தும் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக்

கோரியும் தலைநகர் கொழும்பில் புதிய ஆர்ப்பாட்டங்கள் இன்று (ஆகஸ்ட் 22) தொடங்கி உள்ளன.

கொழும்பு கம்பணி தெரு காவல் நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது என்று இலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.

Watch on YouTube

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தின் போது அதிபர் மாளிகை மற்றும் அலரி மாளிகையில் நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களின் கீழ்

காவல் துறையினர் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களைத் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

இவ்வாறான கைது நடவடிக்கைகளுக்கு எதிராகவே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் தொடர்ச்சியாக அடக்குமுறைகளை கையாள்வதற்கு எதிராகவும், காவல் துறையின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்குழுவினரால் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.