இலங்கையைவிட்டு ஓடமாட்டேன்: மகிந்த ராஜபக்சே

இலங்கையைவிட்டு ஓடமாட்டேன்: மகிந்த ராஜபக்சே

1 mins read

இலங்கையின் முன்னாள் பிரதமரும், அதிபருமான மகிந்த ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பியோடமாட்டார் என அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.

அவருடைய மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான நமலும் நாட்டுவிட்டு செல்லமாட்டார் எனக் கூறப்பட்டது.

இலங்கையில் நிலவும் ஆக மோசமான பொருளியல் நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என இலங்கையர்கள் சாடிவருகின்றனர்.

திரு மகிந்தாவின் இளைய சகோதரரான முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் உள்ளார். மாலத்தீவுகளிலிருந்து அவர் நேற்றிரவு இங்கு வந்தார். மறறொரு சகோதரரான பாசில் ராஜபக்சேவும் இலங்கையைவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனார் அதிகாரிகளால் அவர் தடுக்கப்பட்டார்.

ராஜபக்சே குடும்பம் கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சி புரிந்துவருகிறது. இந்த குடும்பத்துக்கு திரு மகிந்த மூத்த தலைவராக கருதப்படுகிறார்.

-