கமலா ஹாரிஸ் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; விமானம் அவசரமாக தரையிறக்கம்

கமலா ஹாரிஸ் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; விமானம் அவசரமாக தரையிறக்கம்

1 mins read

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

தனி விமானம் மூலம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை திருவாட்டி ஹாரிஸ் நேற்று (ஜூன் 6) தொடங்கினார். அரசு முறை பயணமாக குவாட்டமாலா மற்றும் மெக்சிகோவுக்குச் செல்ல அவர் புறப்பட்டார்.

-

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள விமானப்படை தளத்தில் இருந்து தனது அதிகாரிகளுடன் தனி விமானம் மூலம் திருவாட்டி ஹாரிஸ் புறப்பட்டார்.

புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் அவசரமாக மீண்டும் வாஷிங்டன் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருவாட்டி ஹாரிஸ் மாற்று விமானம் மூலம் குவாட்டமாலா புறப்பட்டுச் சென்றார். அவர் முதலில் பயணம் மேற்கொண்ட விமானத்தில் சிறு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.

வாஷிங்டன் விமானப்படை தளத்தில் விமானத்திலிருந்து இறங்கியபோது இதுகுறித்து செய்தியாளர்களிடம் திருவாட்டி ஹாரிஸ் கூறுகையில், "நான் நலமுடன் உள்ளேன். நாங்கள் சிறு பிரார்த்தனை செய்தோம். ஆனால், நாங்கள் நலமுடன் உள்ளோம்," என்றார்.