சீனாவின் ஷாங்காய் நகரில் கோபத்தில் ஆடவர் ஒருவர் வாகனத்தை ஒரு ஹோட்டலுக்குள் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார். ஹோட்டலுக்குள் இருந்தபடி வேகமாக வாகனத்தை ஓட்டியும் இருக்கிறார். இச்சம்பவம் ஷாங்காயின் கிராண்ட் டிரஸ்டல் பர்ப்பல் மவுன்டன் ஹோட்டலில் நேற்று நிகழ்ந்ததாக உள்ளூர் காவல்துறையினர் கூறினர். தமது மடிக்கணினி காணாமல்போனது தொடர்பில் ஹோட்டல் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஹோட்டலுக்கு காரை அவர் செலுத்தியதில் சேதம் ஏற்பட்டது.
கோபத்தில் ஹோட்டலுக்குள் வாகனத்தைச் செலுத்திய ஆடவர்
1 mins read

