டைட்டானிக் கப்பல் சிதைவுகளின் அரிய வகை காணொளி வெளியானது

1 mins read

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் தொடர்பான அரிய வகை காணொளி வெளியாகியுள்ளது.

கப்பல் 1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கியது, 1,500 பேர் மாண்டனர்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1985ஆம் ஆண்டில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டு காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது.

அதில் இருந்து சில படங்கள் மட்டுமே அப்போது வெளியிடப்பட்டது.

இப்போது முழு காணொளியும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பல் குறித்து பல ஆவணப்படங்கள், திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Watch on YouTube