தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தரையிறங்க தவித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (காணொளி)

1 mins read

ஐரோப்பாவின் பல பகுதிகளை யூனிஸ் புயல் தாக்கியுள்ளது. பிரிட்டனையும் அது புரட்டிப்போட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனின் இத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க விமானங்கள் பெரும் பாடுபாடுகின்றன.

அந்தக் காட்சிகளை யு டியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துவருகிறது 'பிக் ஜெட் டிவி' எனும் தளம்.

இந்தக் காட்சிகள் சுமார் 6.2 மில்லியன் பார்வைகளை ஈர்த்துள்ளன.

இதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் காட்சி பலரையும் திகைக்கவைத்துள்ளது.

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் அடிக்கும் புயல் காற்று மத்தியில் விமானம் திக்குமுக்காடி ஒரு வழியாக தரையிறங்கியது.

கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது.

Watch on YouTube